ராசிபுரம் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

85பார்த்தது
ராசிபுரம் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு, பங்குனி மாத தேய்பிறை திதி முன்னிட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.

முன்னதாக பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி