நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் பங்குனி மாதம் 1-ம் நாள் சனிக்கிழமையை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு கோதண்டராமரை வழிபட்டனர்.