நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் அண்ணாச்சி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் புகை வருவதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவெனப் பரவி கடை முழுவதும் எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.