நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், திமுக சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் மகளிர் அணி பரப்புரை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எம்பி ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.