நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சி இராகவேந்திரா நகரில் எழுப்பப்பட்டுள்ள "அருள்மிகு ஶ்ரீ ஐயப்பன் கோவில்" குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த விழா வெண்ணந்தூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.