இராசிபுரத்தில் ரூ. 4. 56 கோடியில் நலத்திட்ட உதவிகள்

3பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் 1,635 பயனாளிகளுக்கு ரூ. 4.56 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.