நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சித்ராதேவி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.