நாமக்கல் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 9 மாத கர்ப்பிணியான மனைவி ஜமீனாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த ரஞ்சித், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆண்டலூர்கேட் அருகே சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.