நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ஜி.பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 18 வயது நிரம்பிய ஆண், பெண்களை புதிய உறுப்பினர்களாகச் சேர்ப்பது மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.