நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திமுக அரசு பொதுமக்களை 100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமை தாங்கினார். அதிமுக, பாமக, பாஜக கட்சியினர் இதில் பங்கேற்றனர்.