நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி முன்னிலையில், நீர்வளம், உள்ளாட்சி, வருவாய் மற்றும் விவசாயத் துறையினருடன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி மக்களின் குறைகளைத் தெரிவிக்க "NAMMA THIRUCHENGODU, NAMMA MLA" என்ற பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.