சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை மலைப்பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றும் பணி நடைபெற்றது. பசுமைத்தாயகம் மற்றும் செல்வம் கலைக்கல்லூரி மாணவர்கள் இணைந்து 'மலை பாதுகாப்போம் நெகிழி பொருட்களை அகற்றுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று மலைப்பகுதியை தூய்மைப்படுத்தினர். பசுமைத்தாயகம் சார்பில் பொன் ரமேஷ், தினேஷ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.