ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை

2பார்த்தது
சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலையில் தொடர் மழையால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரண்டாவது நாளாக அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஆகாய கங்கை, நம் அருவி, மாசில அருவி போன்ற அருவிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி