நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பி.டி ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 6,000 முதல் ரூ. 8,419 வரையிலும், கொட்டு பருத்தி ரூ. 4,000 முதல் ரூ. 6,010 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 9.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.