நாமக்கல்: ரூ.3.70 கோடிக்கு மாடுகள் விற்பனை

76பார்த்தது
நாமக்கல்: ரூ.3.70 கோடிக்கு மாடுகள் விற்பனை
புதுச்சத்திரம் அருகில் புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4: 00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும், 7ல் பக்ரீத் பண்டிகையையொட்டி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள், அதிகளவு மாடுகளை வாங்கி சென்றதால், விற்பனை அதிகரித்து, 3. 70 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you