காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு. சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆய்வு

0பார்த்தது
காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு. சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆய்வு
சேந்தமங்கலம் வட்டம், துத்திக்குளம் ரெட்டி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருள்பாண்டியன் - விண்விழி தம்பதியின் மகள் லித்யா (12), காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இவர் காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லித்யா, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.