நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டாம் நாளாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இங்குள்ள 72 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் இன்று காலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலைக்கு வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.