வடுகப்பட்டியைச் சேர்ந்த 30 வயது கட்டிட மேஸ்திரி மணிகண்டன், இரவு சாலையோர தடுப்புச்சுவரில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.