நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன், ஏடைப்பட்டி மற்றும் திருமலைப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் திமுகவைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை ஸ்ரீதேவி மோகன் அதிமுக சால்வை அணிவித்து வரவேற்றார். அப்பகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம் என இணைந்தவர்கள் தெரிவித்தனர்.