நாமக்கல்: 40 காசுகள் சரிந்த முட்டை விலை

1பார்த்தது
நாமக்கல்: 40 காசுகள் சரிந்த முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிப்பதாலும், கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை முன்னிட்டு அசைவ உணவை தவிர்ப்பதாலும் முட்டை நுகர்வு குறைந்துள்ளதே இந்த விலை குறைப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.124க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி