நாமக்கல்லைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுந்தரராஜன், தனது சொத்தை தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு, இணை சார்பதிவாளர் மனோகரன், உதவியாளர் சதீஷ் ஆகியோர் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜன், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். பின்னர், ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது மனோகரன், சதீஷ் இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இருவரையும் நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.