நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், செவந்திப்பட்டியில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா (பிஏஐ) சார்பில் 17வது மருத்துவ முகாம் நடைபெற்றது. பிஏஐ கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாதம் இருமுறை மருத்துவ முகாம்களை நடத்துகிறது. இதுவரை 16 முகாம்களில் 5000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது. முகாமில் பொது மருத்துவம், எலும்பு, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.