சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாபட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.