புதுச்சத்திரம் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 1000 உயர்வு

365பார்த்தது
புதுச்சத்திரம் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 1000 உயர்வு
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் மரவள்ளிக் கிழங்கை வியாபாரிகள் வாங்கி, சேகோ பேக்டரிகளுக்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிக்க அனுப்புகின்றனர். மரவள்ளிக் கிழங்கின் மாவுச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ. 13,000-க்கு விற்பனையான தாய்லாந்து வெள்ளை மரவள்ளிக் கிழங்கு, தற்போது ரூ. 1,000 விலை உயர்ந்து ரூ. 14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி