சேந்தமங்கலம்: இரண்டாவது திருமணம்.. பெண் அடித்துக்கொலை

0பார்த்தது
சேந்தமங்கலம்: இரண்டாவது திருமணம்.. பெண் அடித்துக்கொலை
சேந்தமங்கலம் அருகே செல்வம் (42) மற்றும் சுதா (37) ஆகிய இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி வேறு குடும்பம் உள்ள நிலையில் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சுதா பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி சுதாவை அழைத்துச் செல்ல சென்ற செல்வம் அவரைத் தாக்கியதில் சுதா பலத்த காயமடைந்தார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி