எருமப்பட்டி அருகே உள்ள தலைமலை பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள சுமார் 21 கிலோமீட்டர் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கிரிவலப் பாதை அமைப்பதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் அமைந்துள்ளது.