திருச்செங்கோடு அருகே ரத்தினாம்பாள் (87) என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டு, 3 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வீடு தாழிடப்பட்டிருந்த நிலையில், உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கட்டிலுக்கு அடியில் ரத்தினாம்பாள் இறந்து கிடந்துள்ளார். கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டிருந்ததும், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ராமஜெயம் (37) புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.