தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பகுதிகளிலும் முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கோட்டாட்சியர் லெனின் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று எஸ்ஐஆர் பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்தனர்.