ப.வேலுார் அருகே, குழந்தைகள் விளையாடும்போது காயமடைந்ததால் மனைவி ஷாலினியை கணவர் கோகுல் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி நேற்று (மே 15) உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஐந்து வருடங்களே ஆனதால், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. லெனின் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.