வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.