புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ளது புதன் சந்தை இங்கே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மாட்டு சந்தை நடைபெறுகிறது. இந்த மாட்டு சந்தைக்கு நாமக்கல் சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டி ஆகிய சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர், வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்தனர். நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.