நாமக்கல்லில் இருந்து கொல்லிமலைக்கு செல்ல தற்போதுள்ள வழிகளில் பயண நேரம் அதிகமாகிறது. இதைத் தவிர்க்க, சேந்தமங்கலம் அருகே அண்ணா நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து செடிகுளம் வழியாக வெண்டாங்கிக்கு செல்லும் கரடுமுரடான பாதையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாலை சீரமைக்கப்பட்டால், கொல்லிமலைக்குச் செல்லும் பயண நேரம் கணிசமாகக் குறையும்.