சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

0பார்த்தது
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
சேந்தமங்கலம், கொல்லிமலை அடுத்த வளப்பூர் நாடு ஊராட்சி, ஓலையார் பகுதியை சேர்ந்தவர் புஷ்பதரன், 30; மைக் செட் கடை வைத்துள்ளார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புஷ்பதரன், நேற்று முன்தினம், ஓலையார் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்காக மைக் செட் மற்றும் டியூப் லைட் ஆகியவற்றை கட்டிக்கொண்டிருந்தார். அப்போது டியூப் லைட்டிற்கு மின் இணைப்பை கொடுத்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டதில், புஷ்பதரன் உடல் கருகி உயிரிழந்தார். வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புஷ்பதரன் உடலை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :