
தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம்
நாமக்கல் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் திலீப், முதலைப்பட்டி, செம்பாக்கம் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று மாலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள முதியவர் மற்றும் பெண்களிடம் மறவாமல் விசில் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றியடைய செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் மூலம் வாக்காளர்களின் ஆதரவை திரட்ட அவர் முயன்றார்.




































