திருச்செங்கோடு அருகே காளிப்பட்டி பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற நாட்டு மாடுகளின் சந்தையில் மயிலம், காங்கேயம் காளை, குள்ள மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் பல்வேறு நாட்டு வகை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இந்த சந்தையை ஒட்டி, சேலம், கரூர், கோவை, பொள்ளாச்சி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாடு வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து ஆர்வத்துடன் மாடுகளை வாங்கிச் சென்றனர். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கிய சந்தையாக விளங்குகிறது.