மல்லசமுத்திரத்தில் நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தங்கமணி கலந்துகொண்டு, வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை வகித்த இக்கூட்டத்தில், திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்சரஸ்வதி, நகர செயலாளர் சுந்தரராஜன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.