தேவனாங்குறிச்சியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்

68பார்த்தது
தேவனாங்குறிச்சியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பிரசாரத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்குரைஞர் ஈ. ஆர். சந்திரசேகர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ். ஆர். எம். டி. சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி எம்எல்ஏ கலந்துகொண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும், தற்போதைய திமுக ஆட்சியில் நிகழும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இரா. முருகேசன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பழ. இராமலிங்கம், சுரேஷ்குமார், பரணிதரன், செங்கோட்டுவேல், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி