நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நம்ம திருச்செங்கோடு தனியார் அறக்கட்டளை, தனியார் பொறியல் கல்லூரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை இணைந்து சண்முகா பொறியல் கல்லூரியில் இன்று (நவ. 12) ரத்ததான முகாம் நடத்தினர். இதில் 64 ரத்தக் கொடையாளர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். சண்முகா கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திருமூர்த்தி ஆறுமுகம் இந்த முகாமை சிறப்பித்தார்.