நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் மன்றத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் "பசுமை யோசனை, பசுமை செயல்பாடு, பசுமை வாழ்வு" என்ற கருப்பொருளின் கீழ் இந்த மன்றம் அமைக்கப்பட்டது. விழாவின் முதல் கட்டமாக, மூலிகை தோட்டம் மற்றும் பசுமை உறுதிமொழியினை கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.