சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பெரிய சோரகை வைரம் தெருவைச் சேர்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணராஜ் (26), மரம் ஏறும் தொழிலாளி. கடந்த 13 ஆம் தேதி மல்லசமுத்திரம் வட்டூரில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியபோது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணராஜை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.