திருச்செங்கோடு நகராட்சியின் கழிவு மற்றும் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் ஏரியில் கலக்கப்படுவதால் சத்ய நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நிலமும் நீரும் முற்றிலும் மாசு அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.