நாமக்கல்: குழந்தைக்கு பாலியல் தொல்லை.. தந்தை கைது

5பார்த்தது
நாமக்கல்: குழந்தைக்கு பாலியல் தொல்லை.. தந்தை கைது
திருச்செங்கோடு அருகே பாதரையில், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மில் தொழிலாளி கார்த்தி (23) போக்சோ சட்டத்தில் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த கார்த்தி, பாதரையில் உள்ள திருச்செங்கோடு ஸ்பின்னிங் மில்லில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி இரவு, மதுபோதையில் தனது இரண்டரை வயது மகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி