நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு சமூக வலைதள குழு அமைப்பினர் பல்வேறு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருச்செங்கோட்டில் மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியை நடத்தினர். 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.