நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் நாளை (நவம்பர் 13) வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். எலச்சிபாளையம் டவுன், சத்யாநகர், சமத்துவபுரம், அகரம், கொன்னையார், நல்லாம்பாளையம், சீத்தக்காடு, அத்திமரப்பட்டி, ஆயித்தாக்குட்டை, அவினாசிப்பட்டி, வண்டிநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த மின் நிறுத்தம் அமல்படுத்தப்படும்.