நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த உஞ்சனை துணை மின் நிலையத்தில் நாளை (பிப். 17) செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், பூவாழக்குட்டை, முகாசி போக்கம்பாளையம், உஞ்சனை, மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், கரிச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.