திருச்செங்கோடு பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

1பார்த்தது
திருச்செங்கோடு பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 85 கவுண்டம்பாளையம் ஊராட்சியில், குடித்தெரு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.