நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே பொன்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரர் கோவிலில், இன்று திங்கட்கிழமை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் நந்தி பகவானுக்குப் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.