நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்து மாரியம்மன் கோயிலின் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு, இன்று (நவ. 4) இரவு 7 மணியளவில் தெப்பக்குளத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தெப்பத்தேர் பவணி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.