நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 31 மூட்டைகள் ரூ. 2 லட்சத்திற்கு ஏலம் போனது. முதல் தர கொப்பரை கிலோ ரூ. 160 முதல் ரூ. 182 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை கிலோ ரூ. 111 முதல் ரூ. 135.10 வரையிலும் விற்பனையானது.