நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 10ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.